3wc.in

3 Week Challenge - Don't Miss Out | Reserve Your Seat
Sunday, December 3
EVENT DATE
5:00 AM
EVENT TIME
00 DAYS
00 HOURS
00 MINS
00 SECS

தமிழ்நாட்டின் #1 வாழ்க்கை மாற்றம் மற்றும் வெற்றிப் பயிற்சி

உங்க வாழ்க்கையை மாற்ற 21 நாட்கள் போதாது...

ஆனா தொடங்க 21 நாட்கள் போதும்.

உங்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக , வாழ்வின் அர்த்தம் புரிவதற்காக , வாழ்வின் நோக்கம் தெரிவதற்காக , உங்கள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதற்காக , உங்கள் ஆற்றலின் செயல்திறன் வெளிப்பட , இணையுங்கள் 3 வார சவாலில்

வெற்றிக்கான உங்கள் பயணத்தை தமிழ்நாட்டின் சிறந்த பயிற்சியாளர் PK பிரசன்ன வெங்கடேசனுடன் தொடங்குங்கள்.

📌 தேதி : 03 டிசம்பர் 2026 – 23 டிசம்பர் 2026

⏰ நேரம் : 5:00 AM – 6:00 AM

Reserve your seat

Enter your details to continue to payment.

Please enter a valid name, email and 10-digit number.

இப்போதே இணைந்திடுங்கள்

நீங்கள் தயாரா மாற்றத்திற்காக? 🌟

மைண்ட்ராய்டு அகாடமியின் தனிமுன்னேற்றப் பயிற்சியின் மூலம், உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, ஒவ்வொரு நாளும் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குங்கள்.
Daily Live
1 Hour
Every Morning
5 AM
Days
10
Completed Batches
10
Lives Transformed
0 +

Limited to First 100 Registration

Join Now & Unlock

Special Early Bird Offer

*Only for the First 100 Registrations

Join during the special offer period and receive Exclusive Private YouTube Community Access + a FREE E-Book at no additional cost.
Get access to a private learning community where you can stay connected, receive valuable updates, access helpful resources, and continue learning beyond the challenge.

Total Value

₹10,000

₹999/-

✨ ✦ ✧
Want to know what's included in your special offer?
Reveal Offer
↗ Slide to reveal
Here's What You Get
FREE
Exclusive YouTube Community Access!
  • Exclusive videos & content
  • Community updates & announcements
  • Additional learning resources
  • Questions, discussions & support
  • Early access to selected content
  • 100% FREE with Registration
+
FREE
Practical PDF Guide to Faster Growth
  • Practical & Easy to Follow
  • Step-by-Step Guidance
  • Expert Tips & Insights
  • Actionable Resources
  • Learn at Your Own Pace
  • Lifetime Reference
  • 100% FREE with Registration
Join Now & Claim the Access
-- of 100 spots filled
Loading…

உறுதியான முடிவு மாற்றத்தை உருவாக்கும்.

3 வார சவால் என்றால் என்ன - பி.கே. பிரசன்ன வெங்கடேசன் - விடமிருந்து நேரடியாக கேளுங்கள்

இந்த 5 நிமிட வீடியோவைப் பாருங்கள்

பயிற்சியாளரை அறிந்துகொள்ளுங்கள்

பி.கே. பிரசன்ன வெங்கடேசன் யார்?

தொழில் வளர்ச்சி ஆலோசகர் | தலைமைத்துவப் பயிற்சியாளர் | வாழ்க்கை மாற்ற வழிகாட்டி | செயல்திறன் மேம்பாட்டு நிபுணர்

பி.கே. பிரசன்ன வெங்கடேசன் அவர்கள் தமிழ்நாட்டின் முன்னணி வாழ்க்கை மாற்றம் மற்றும் வெற்றிப் பயிற்சியாளர்களில் ஒருவர். மைண்ட்ராய்டு அகாடமி நிறுவனத்தின் நிறுவனர், ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில், தொழில் வளர்ச்சி, தலைமைத்துவ மேம்பாடு, நிறுவன முன்னேற்றம் மற்றும் தனிநபர் செயல்திறன் உயர்வு போன்ற பல துறைகளில் சிறப்பான வழிகாட்டுதலை வழங்கி வருகிறார். பல்வேறு சவால்களை எளிமையான செயல்திட்டங்களாக மாற்றி, தனிநபர்களும் நிறுவனங்களும் நிலையான வெற்றியை அடைய உதவியுள்ளார்.
அவரது 21 நாள் வாழ்க்கை மாற்றப் பயிற்சி என்பது மனிதர்களின் சிந்தனை, பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளில் நிலையான மாற்றத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் மூலம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை கண்டறிதல், ஒழுக்கமான பழக்கங்களை வளர்த்தல், தன்னம்பிக்கையை உயர்த்தல் மற்றும் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணருதல் ஆகியவற்றை நடைமுறை வழியில் கற்றுக்கொள்ளலாம்.
இன்றுவரை ஆயிரக்கணக்கானோர் அவரது வழிகாட்டுதலின் மூலம் தங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும், உறவுகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். “ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் முழு திறனையும் வெளிக்கொண்டு வந்து, வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவதே அவரது நோக்கம்.”

அனைத்து வயதினரின் வெற்றிப் பயணங்கள்

Photo related to a testimonial from திருமதி சுந்தரவல்லி S

தொண்டை புற்றுநோயால் வாழ்க்கையை கைவிட நினைத்த நிலையிலிருந்து 21 நாள் சவாலின் மூலம் வெற்றிகரமான வாழ்க்கைக்கு

“ஒரு காலத்தில் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று உணர்ந்தேன். தொண்டை புற்றுநோயுடன் போராடிய அந்த காலம் என் உடல்நலத்தை மட்டுமல்ல, என் தன்னம்பிக்கை, தொழில், மற்றும் எதிர்கால நம்பிக்கையையும் பெரிதும் பாதித்தது. பயமும் மனச்சோர்வும் என்னை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தன. வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவித்தேன். அந்த நேரத்தில், 21 நாள் தனிமனித மேம்பாட்டு சவாலில் இணைந்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தினமும் கிடைத்த பயிற்சிகள், நேர்மறையான சூழல், மற்றும் தொடர்ச்சியான ஊக்குவிப்பு என் தன்னம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பியது. என் பயங்களை வென்று, என்னுள் இருந்த உண்மையான வலிமையை மீண்டும் கண்டறிய உதவியது. இன்று நான் வாழ்க்கையை நம்பிக்கையுடனும், தைரியத்துடனும், தெளிவான நோக்கத்துடனும் எதிர்கொள்கிறேன். என்னை மீண்டும் என்னால் நம்ப வைக்க உதவிய மைன்ட்ராய்ட் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.”

Photo related to a testimonial from திருமதி டெய்சி ராணி Y

சராசரி லாபத்திலிருந்து 21 நாள் சவாலின் மூலம் 3 மடங்கு தொழில் வளர்ச்சிக்கு / தொடர்ச்சியற்ற வாழ்க்கையிலிருந்து 21 நாள் சவாலின் மூலம் என் கனவு வீட்டை நனவாக்கினேன்

“பல ஆண்டுகளாக என் வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் தொடர்ச்சியின்மையாக இருந்தது. மிகுந்த உற்சாகத்துடன் இலக்குகளை நிர்ணயிப்பேன். ஆனால் அவற்றை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல், என் பல கனவுகள் கனவாகவே இருந்தன. 21 நாள் தனிமனித மேம்பாட்டு சவாலில் இணைந்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் பயிற்சி, தொடர்ச்சியின் சக்தி, இலக்கு நிர்ணயம் மற்றும் கற்பனை மூலம் வெற்றியை உருவாக்கும் முறையை எனக்குக் கற்றுக் கொடுத்தது. அவற்றை தினமும் நடைமுறைப்படுத்தியபோது, நான் அதிக கவனத்துடனும், ஒழுக்கத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட ஆரம்பித்தேன். என் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று சொந்த வீடு வாங்குவது. வெறும் மூன்று மாதங்களிலேயே அந்த கனவு நனவானது. இன்று என் தொழிலின் லாபம் 3 மடங்காக உயர்ந்துள்ளது. ஒருகாலத்தில் கனவாக இருந்த வாழ்க்கையை இன்று நிஜமாக வாழ்ந்து வருகிறேன். இந்த அற்புதமான மாற்றத்தை எனக்குக் கொடுத்த மைண்ட்ராய்ட் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.”

Photo related to a testimonial from திரு. காமராஜ் A

₹4 லட்சம் லாபத்திலிருந்து ₹8 லட்சம் லாபம் : 21 நாள் சவாலால் கிடைத்த மிகப்பெரிய மாற்றம்

“21 நாள் தனிமனித மேம்பாட்டு சவாலில் இணைவதற்கு முன், என்னுள் திறமை இருந்தாலும் தொடர்ச்சியும் ஒழுக்கமும் இல்லை. முக்கியமான வேலைகளை தள்ளிப்போடுவது என் பழக்கமாக இருந்தது. நேரத்தை சரியாக பயன்படுத்தவும் முடியாமல் இருந்தேன். 21 நாள் சவால் என் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றியது. அதிகாலையில் எழுவது, தினமும் புத்தகம் வாசிப்பது, திட்டமிட்ட வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பது போன்ற நல்ல பழக்கங்கள் என்னுள் உருவானது. இந்தச் சிறிய மாற்றங்களே என் சிந்தனை, வாழ்க்கை மற்றும் தொழிலை முழுமையாக மாற்றின. இன்று என் தொழிலின் லாபம் ₹4 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக உயர்ந்துள்ளது. அத ைவிட முக்கியமாக, இன்று நான் தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தெளிவான இலக்குடன் வாழும் மனிதராக மாறியிருக்கிறேன். இந்த மாற்றத்திற்குக் காரணமான மைண்ட்ராய்ட் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.”

Photo related to a testimonial from திரு. சக்கரகேசவரம் T D

திசையற்ற வாழ்க்கையிலிருந்து அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு...

“நான் ஒருபோதும் மாற முடியாது என்று நம்பிய ஒரு காலம் இருந்தது. ஆரோக்கியமற்ற பழக்கங்கள், கட்டுப்பாடற்ற கோபம், பயம், தூக்கமின்மை, மதுப்பழக்கம் மற்றும் ஒழுக்கமின்மை ஆகியவை என் வாழ்க்கையை முழுமையாக ஆட்கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில், என் மீதே எனக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. 2022-ஆம் ஆண்டு 21 நாள் தனிமனித மேம்பாட்டு சவாலில் இணைந்ததே என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தினமும் கிடைத்த வழிகாட்டுதல் என் பழக்கங்கள், சிந்தனை மற்றும் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையை முழுமையாக மாற்றியது. இன்று 53 வயதில், ஒழுக்கம், தெளிவான இலக்கு, உடல்நலம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். இந்த மாற்றம் என்னை மட்டுமல்ல, என் முழு குடும்பத்தின் வாழ்க்கையிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயிற்சியால் நான் பெற்ற மிகப்பெரிய வெற்றி சாதனை அல்ல... என்னை நானே மீண்டும் கண்டுபிடித்ததுதான். இன்று நான் பெருமையுடன் சொல்கிறேன்... 'எனக்கு என் வாழ்க்கை மிகவும் பிடிக்கும்!'”

Photo related to a testimonial from திரு. ஜலயானி S

பயத்திலிருந்து நம்பிக்கைக்கு : 21 நாள் சவால் எங்கள் குடும்பத்திற்கு புதிய தைரியத்தை அளித்தது

“என் மனைவியின் அறுவை சிகிச்சை எங்கள் வாழ்க்கையின் மிகக் கடினமான காலமாக இருந்தது. அந்த நேரத்தில் 21 நாள் தனிமனித மேம்பாட்டு சவால் எனக்கு மனவலிமையையும் நம்பிக்கையையும் அளித்தது. மைன்ட்ராய்ட் குடும்பத்தின் பிரார்த்தனைகளும், ஊக்கமும், அன்பான ஆதரவும் எங்களை மீண்டும் உற்சாகமாக வாழ வைத்தது. இன்று என் மனைவி நலமுடன் இருக்கிறார். எங்கள் குடும்பம் இன்னும் வலிமையாகியுள்ளது. எங்கள் குழந்தைகளும் மைன்ட்ராய்ட் நிகழ்ச்சிகளில் பெருமையுடன் பங்கேற்று வருகின்றனர். எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எப்போதும் துணையாக இருந்த மைண்ட்ராய்ட் அகாடமிக்கு மனமார்ந்த நன்றிகள்”

Photo related to a testimonial from திரு. சித்திரை செல்வம் G

என் சகோதரி கட்டாயப்படுத்தியதால் தான் சேர்ந்தேன்... ஆனால் அது என் வாழ்க்கையின் சிறந்த முடிவாக மாறியது!

“என் சகோதரி வற்புறுத்தாமல் இருந்திருந்தால், நான் 21 நாள் தனிமனித மேம்பாட்டு சவாலில் ஒருபோதும் சேர்ந்திருக்க மாட்டேன். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கும்போது, என் வாழ்க்கையை முழுமையாக மாற்றிய மிகச் சிறந்த முடிவு அதுதான் என்று பெருமையாகச் சொல்கிறேன். இந்த மாற்றம் என் தொழிலில் மட்டும் இல்லை... முதலில் என்னுள் நடந்தது. நான் ஒரு சிறந்த கணவராகவும், அன்பான தந்தையாகவும், நம்பிக்கைக்குரிய நண்பராகவும், பொறுப்புள்ள மனிதராகவும் மாறினேன். என் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடத் தொடங்கினேன். ஒழுக்கம், திட்டமிடல், பொறுப்புணர்வு ஆகியவை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகின. சமூக சேவையிலும் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தேன். நான் என்னை மாற்றிக்கொண்டபோது, வெற்றியும் இயல்பாக என்னைத் தேடி வந்தது. இன்று புதிய வீடு, என் கனவு தார் (Thar) கார், வளர்ந்து வரும் தொழில், அர்த்தமுள்ள வாழ்க்கை என பல ஆசீர்வாதங்களை பெற்றுள்ளேன். என் வாழ்க்கையை மாற்றிய மைண்ட்ராய்ட் அகாடமிக்கு என்றும் என் மனமார்ந்த நன்றிகள்.”

Photo related to a testimonial from திரு. பிரபுராஜ் ராஜ்குமார்

20 வாடிக்கையாளர்களிலிருந்து 100+ வாடிக்கையாளர்கள் வரை...என் வாழ்க்கையை மாற்றிய மனநிலை – 21 நாள் சவால்

“21 நாள் தனிமனித மேம்பாட்டு சவாலில் இணைவதற்கு முன், தன்னம்பிக்கை குறைவு, பண நெருக்கடி மற்றும் எதிர்காலம் குறித்த குழப்பம் என் வாழ்க்கையை ஆட்கொண்டிருந்தது. என் தொழிலில் வெறும் 20–30 வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்தனர். என்னுடைய திறமையையே நான் சந்தேகித்துக் கொண்டிருந்தேன். 21 நாள் சவால் என் மனநிலையை முழுமையாக மாற்றியது. தொடர்ச்சியான செயல்பாடு, கற்பனை மூலம் இலக்கை அடைவது மற்றும் என்னை நானே நம்புவது போன்ற வெற்றியின் அடிப்படைக் கொள்கைகளை கற்றுக்கொண்டேன். காரணங்களைச் சொல்லுவதை நிறுத்தி, தினமும் தெளிவான நோக்கத்துடன் செயல்பட ஆரம்பித்தேன். இன்று என் தொழிலில் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். என் லாபமும் 4 மடங்கு உயர்ந்துள்ளது. அத ைவிட முக்கியமாக, இன்று எந்தச் சவாலையும் தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனை மற்றும் உறுதியுடன் எதிர்கொள்கிறேன். மிகப்பெரிய மாற்றம் என் தொழிலில் மட்டும் இல்லை... நான் ஒரு புதிய மனிதராக மாறியதுதான். என் திறமையை வெளிக்கொண்டு வர உதவிய மைண்ட்ராய்ட் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.”

Photo related to a testimonial from செல்வி.சர்மிஷ்டா

கற்றலில் இருந்து வளர்ச்சிக்கு – 21 நாட்களின் மறக்க முடியாத பயணம்

“நான் சென்னை சேர்ந்த சர்மிஷ்தா. எனது திறமைகளை மேம்படுத்தவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், புதிய வாய்ப்புகளை ஆராயவும் 3-Week Challenge-ல் இணைந்தேன். இந்த 21 நாள் பயணம் என் தனிப்பட்ட வளர்ச்சியில் பல நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதுடன், புதிய நபர்களை சந்தித்து, அவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தப் பயணம் எனது பார்வையை விரிவுபடுத்தி, புதிய விஷயங்களை முயற்சிக்கும் தைரியத்தையும், அழகான நினைவுகளையும் அளித்தது. கற்றுக்கொள்ளவும், இணைந்திருக்கவும், வளரவும் சிறந்த வாய்ப்பை வழங்கிய Mindroid Academy-க்கு மனமார்ந்த நன்றி. இந்த 21 நாள் பயணம் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.”

Photo related to a testimonial from செல்வி.த்வானிகா லெனின்

தயக்கத்திலிருந்து தன்னம்பிக்கைக்கு – 21 நாட்களின் பயணம்

“நான் த்வானிகா லெனின். இந்த 21-Day Team Challenge-ல் ஒரு பகுதியாக இருந்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். இந்த 21 நாட்கள் எனக்கு பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ளவும், என்மீது அதிக நம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளவும் உதவியது. சுவாரஸ்யமான செயல்பாடுகள் மற்றும் பயனுள்ள பயிற்சிகள் மூலம், எனது Comfort Zone-ஐ விட்டு வெளியே வந்து, இதுவரை முயற்சி செய்யாத விஷயங்களைச் செய்யும் தைரியம் கிடைத்தது. இந்தப் பயணத்தில் சிறந்த வழிகாட்டுதலை வழங்கிய Mentor பிரசன்னா சார் அவர்களுக்கும், தொடர்ந்து ஒருங்கிணைத்து ஆதரவளித்த Organizing Team-க்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டவற்றை என் வாழ்க்கையிலும் தொடர்ந்து செயல்படுத்துவேன்.”

Photo related to a testimonial from திரு. நந்தகோபாலன்

தன்னம்பிக்கையின்மையிலிருந்து தன்னம்பிக்கையுடன் – 3WC தந்த மாற்றம்

“தந்தையின் பரிந்துரையால் 3-Week Personal Development Challenge-ல் இணைந்தேன். ஆரம்பத்தில், அப்பாவின் Vision Board மற்றும் சில பணிகளில் உதவியபோது, இந்தப் பயிற்சியின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 3WC-ல் கற்றுக்கொண்ட ஒவ்வொரு விஷயமும், “என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்ற நம்பிக்கையை எனக்குள் உருவாக்கியது. முன்பு தன்னம்பிக்கை குறைவாக இருந்த நான், இன்று எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் அளவிற்கு மனதளவில் வலிமையாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன். பிரசன்னா சார் எனக்கு “Guide on Duty – உண்மையான GOD” போல வழிகாட்டியவர். இந்தப் பயணத்தை மற்றவர்களுக்கும் மனதார பரிந்துரைக்கிறேன். 3WC எனக்கு வாழ்க்கையை இன்னும் வலிமையாக எதிர்கொள்ளும் நம்பிக்கையை அளித்துள்ளது.”

Photo related to a testimonial from திரு. சுதர்சன்

தூக்கத்தில் இருந்து 4:30 AM எழும் புதிய வாழ்க்கை!

“Instagram-ல் பார்த்துதான் 3WC பற்றி தெரிந்து கொண்டு இந்தப் பயணத்தில் இணைந்தேன். ஆரம்பத்தில், காலை 8 மணி வரை தூங்கிக்கொண்டிருந்த நான், இன்று 4:30 மணிக்கே எழுந்து, தயாராகி, உற்சாகத்துடன் வகுப்பில் கலந்துகொள்கிறேன். இந்த மாற்றத்தை என்னாலேயே நம்ப முடியவில்லை! 3WC எனக்கு ஒரு புதிய energy-யையும், நல்ல பழக்கங்களையும், தொடர வேண்டும் என்ற motivation-ஐயும் கொடுத்துள்ளது. இந்த அனுபவத்தை வார்த்தைகளால் முழுமையாக விவரிக்க முடியவில்லை. இந்த வாய்ப்பை வழங்கிய Mindroid Academy-க்கு மனமார்ந்த நன்றி. இந்த positive journey-யை தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காக Action Takers Community-யிலும் இணைந்துள்ளேன். ❤️”

Photo related to a testimonial from செல்வி. துர்கா தேவி

எதிர்மறை எண்ணங்களிலிருந்து நேர்மறையான மாற்றத்திற்கு – 21 நாட்களின் பயணம்

“நான் துர்கா தேவி. எதிர்மறை எண்ணங்களை மாற்றி, எனக்குள் நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் 3 Weeks Challenge-ல் இணைந்தேன். ஆனால், இந்த 21 நாட்கள் என் எண்ணங்களையும், என்னைப் பற்றிய பார்வையையும் இவ்வளவு ஆழமாக மாற்றும் என்று எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக Final Class-ல், என்னைப் பற்றிய தேவையற்ற சந்தேகங்களே பல விஷயங்களில் என்னைத் தடுத்து வந்ததை உணர்ந்தேன். இந்தப் பயணம் எனக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கியது. 21 நாட்களும் சிறப்பாக வழிநடத்திய Prasanna Sir அவர்களுக்கும், என்னுடன் பயணித்த நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த Challenge எனக்கு மறக்க முடியாத அனுபவம்!”

3 வாரப் பயிற்சி

21 நாள் பயணத் திட்டம்

01

முதல் வாரம்

உங்களை அறிதல் & இலக்கு

இரண்டாம் வாரம்

02

ஒழுக்கம் & மாற்றம்

மூன்றாம் வாரம்

03

திறமை & முன்னேற்றம்

இந்தப் பயிற்சியில் நீங்கள் பெறுவது

ஏன் இந்த 21 நாள் பயிற்சி?

இனி யோசிக்காதீர்கள்.

3 வாரங்கள் உறுதியுடன் பயணித்தால், மாற்றம் நிச்சயம்.

பி.கே. பிரசன்னா வெங்கடேசனின் 3 வார சவாலில் இணைந்து, உங்கள் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை கண்டறிந்து, சுய விழிப்புணர்வை வளர்த்து, உங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணருங்கள். தொடர்ச்சியான முயற்சியின் மூலம் மனதளவிலும், உணர்வளவிலும், தனிப்பட்ட வளர்ச்சியிலும் மாற்றத்தை அனுபவியுங்கள்.

வாழ்க்கை நோக்கம்

வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அறியாததால் பலர் வெற்றியை இழக்கிறார்கள். மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாததால், பல தொழில்முனைவோர் வளர்ச்சியில் தேக்கமடைந்து முன்னேற முடியாமல் போகிறார்கள்.

சுய ஒழுக்கம்

உத்வேகம் உங்களை தொடங்க வைக்கும். ஒழுக்கம் உங்களை தொடர்ந்து முன்னேறச் செய்யும். 21 நாட்கள் ஒரு நல்ல பழக்கத்தை உருவாக்கும். அந்தப் பழக்கத்தை 90 நாட்கள் தொடர்ந்து கடைப்பிடித்தால், அது உங்கள் வாழ்க்கை முறையாக மாறும்.

சிறப்பு திறன்

ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உள்ளது. அதை கண்டறிந்து தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். தோல்வி என்பது முடிவல்ல; அது வெற்றிக்கான முதல் படி.

ஒரு மணி நேரம்... ஒரு புதிய வாழ்க்கை.

ஏன் காலை 5 மணி ?

🌅

அமைதியான காலை

உலகம் இன்னும் விழிக்காத நேரம். உங்கள் கனவுகளுக்காக உழைக்க சிறந்த தருணம்.
🚫

தெளிவான சிந்தனை

அதிகாலை நேரம் உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
🎯

உங்களுக்கான நேரம்

காலை 5 மணிக்கு எழுவது ஒரு பழக்கம் மட்டுமல்ல; அது வெற்றிகரமான வாழ்க்கைக்கான முதல் படி.
🚀

வெற்றியின் பழக்கம்

யாரும் தொந்தரவு செய்யாத இந்த ஒரு மணி நேரம், முழுவதும் உங்களின் வளர்ச்சிக்காக.

21 நாட்களுக்குப் பிறகு...

இந்த 21 நாள் பயணத்தின் முடிவில், உங்களுக்குள் ஒரு புதிய மனிதரை நீங்கள் காண்பீர்கள்

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு

₹999/-

21 நாள் வாழ்க்கை மாற்றப் பயணம்

ஒருமுறை பதிவு


தேதி : 03 டிசம்பர் 2026 – 23 டிசம்பர் 2026

இந்தப் பயிற்சியில் நீங்கள் பெறுவது

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

3 வார வாழ்க்கை மாற்றப் பயிற்சி என்றால் என்ன?
3 வார வாழ்க்கை மாற்றப் பயிற்சி என்பது தமிழ்நாட்டின் முன்னணி வெற்றிப் பயிற்சியாளர் பி.கே. பிரசன்ன வெங்கடேசன் வழங்கும் 21 நாள் தனிமுன்னேற்றப் பயணம். இந்தப் பயிற்சி, உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டறியவும், ஒழுக்கமான தினசரி பழக்கங்களை உருவாக்கவும், உங்களின் திறமைகளை வெளிக்கொணரவும் உதவுகிறது. 21 நாட்கள் தொடர்ந்து தினமும் காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறும்.
பி.கே. பிரசன்ன வெங்கடேசன் அவர்கள் Mindroid Academy நிறுவனத்தின் நிறுவனராகவும், தமிழ்நாட்டின் முன்னணி வாழ்க்கை மாற்றம் மற்றும் வெற்றிப் பயிற்சியாளர்களில் ஒருவரும் ஆவார். மனநிலை மாற்றம், ஒழுக்கம், வாழ்க்கை நோக்கம் மற்றும் தனிமுன்னேற்றம் ஆகிய துறைகளில் 8,200-க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியுள்ளார்.
இது வெறும் ஆன்லைன் வகுப்பு அல்ல. 21 நாட்கள் தொடர்ந்து காலை 5 மணிக்கு நடைபெறும் கட்டுப்பாடான பயிற்சி. இதில் வாழ்க்கை நோக்கம், ஒழுக்கம், தினசரி செயல்பாடு, தன்னம்பிக்கை மற்றும் வெற்றிக்கான பழக்கங்கள் ஆகியவற்றை நடைமுறையில் கற்றுக்கொள்வீர்கள்.
இல்லை. இந்தப் பயிற்சிக்கான பதிவுகள் வழங்கப்படமாட்டாது. ஒவ்வொரு நாளும் நேரலையில் (Live) கலந்துகொள்வதன் மூலம் முழுமையான அனுபவத்தையும் பயிற்சியின் உண்மையான பயனையும் பெற முடியும்.
தனிமுன்னேற்றம், ஒழுக்கமான வாழ்க்கை, தன்னம்பிக்கை, தெளிவான இலக்கு மற்றும் வெற்றிக்கான சரியான மனநிலையை உருவாக்க விரும்பும் மாணவர்கள், தொழில்முனைவோர், வேலைக்குச் செல்லுபவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவரும் இந்தப் பயிற்சியில் சேரலாம்.

இன்னும் ஏதேனும் கேள்விகள் உள்ளதா?

தொடர்புக்கு